Friday, June 22, 2007

பார்வை


இரவுக்கும் பகலுக்கும்
இடையிலான
இளங்காலைப் பொழுது...
ஞானச் செருக்குடன்
வானம் நோக்கிய
பசும் புல்வெளிகள்
குணமகள் கோலமாய்
தலை குனிந்திருக்கின்றன...
புல்லின் நுனியில் பனித்துளி
சிலர் நினைக்கக் கூடும்
தென்றல் வந்து
தழுவல் கொண்டு
தந்த முத்தத்தின்
அடையாளமாய்
உறையாத உமிழ்நீரோ?
உழைப்பின் முடிவில்
சிந்திய வியர்வை துளியோ என்று!
யார் உணரக்கூடும்?
வலிக்குமென்று தெரியாமல்
வன்மமாய்
கால் பதித்து ஒருவன்
காயப்படுத்தியதால் வந்த
கண்ணீர் துளியே என்று
வெற்றுப் பார்வைக்கு
விளங்கிடுவதில்லை
உற்று நோக்கினாலே புரியும்
புல்லிற்க்கும் உயிருண்டு...
உணர்வுகள் தாங்கும்
ஓர் இதயமுண்டு
---நாவிஷ் செந்தில்குமார்

3 comments:

Naveen said...

absolutely great

கலைவேந்தன் said...

நண்பரே!
உங்கள் கவிதைகள் அத்தனையும் அருமை. தாங்கள் கீழ்க்கணட தமிழ் மன்றத்தில் உறுப்பினர் ஆகுங்கள்.
http://www.muthamilmantram.com/

உங்கள் கவிதைகளுக்கு ஒரு நல்ல தளம் கிடைக்கும்.
நான் கலைவேந்தன்.
என் கவிதைகளையும் வாசியுங்கள் இங்கே!
http://kalaiventhankavithaikal.blogspot.com/

முத்தமிழ்மன்றத்தில் சந்திப்போம்!

Anonymous said...

Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Até mais.