Friday, June 1, 2007

வாழ்க்கை வரம்


பிறப்பு என்ன கேடு
என்று நொந்தேன் - உன்
பிம்பம் பார்த்த
பிறகு தானே உணர்ந்தேன்

மொழியிழந்து நிற்கிறேன்
விழி பிளந்து வியக்கிறேன்
எக்கவியும் எழுதாதவொன்றை
எழுதிவிட துடிக்கிறேன் - உன்
அழகு முன்னாலே
முடியாது தோற்கிறேன்...

பக்கங்கள் பல நிரப்பி
கவிதை ஒன்று
எழுதிவிட்டேன் தோழி!
தலைப்பு சூட
என்மொழி வற்றிப்போனது ஏனடி!
உன் பெயர்
சொல்லிவிட்டுப் போ பெண்ணே!
என் கவிதைக்கு
தலைப்புக் கிடைக்கும் தானே!

உன் விரல் நகமாய்
ஒரு நாள்
வியர்வை நீராய்
ஒரு நாள்
உன் காற்றறைக்குள்
ஒரு நாள்
கண்ணின் மணியில்
ஒரு நாள்
உன் நெஞ்சுக் கூட்டில்
ஒரு நாள்
மஞ்சத்தில்
ஒரே ஒரு நாள்...

இப்போதே என் ஆயுள்
முடியாதா?
உன் நினைவோடு
என் ஆவி அலையாதா?
--நாவிஷ் செந்தில்குமார்

2 comments:

Anonymous said...

இப்போதே என் ஆயுள்
முடியாதா?
உன் நினைவோடு
என் ஆவி அலையாதா?

ஆயிரம் முறை படித்தாலும் அலுக்காத வரிகள்

இந்த வரி யாரையேனும் நினைத்து
எழுதப்பட்டிருந்தால்...
அந்த பெண்ணை போல்
லக்கி(lucky) யாரும் இருக்க முடியாது...

நட்புடன்
இளங்கோ

Anonymous said...

really nice .... last para...no words to explain friend ..

Friendly,