Wednesday, June 6, 2007

வரைகோட்டு ஓவியங்கள்


முந்தைய நாட்களின்
ஏதோ ஓர் இரவில்
முகமறைத்துக் கொண்டதென்
எதிர்காலம்

காலைக் கதிரவனின்
கதகதப்பில்
உயிர் பெறலாம் என்றால்
நான் பனித்துளியா?
புல்வெளியா?

விதை விதைத்தவர்
யாரோ?
வினை அறுப்பது
நானே!

பிறப்பளித்வள் - சேர்த்தே
இறப்பையும்
எழுதிவிட்டுச் சென்றுவிட்டாள்
சிசுக் கொலையிலிருந்து
சிறை விடுத்தவள்
உயிர் கொல்லி நோயை
உடன் அளித்தாளே!
கள்ளிப்பால் கொடுக்க
தவறியவள்
கொள்ளி போட்டு சென்றாளே
நான் என்ன
சாபத்தின் ஒட்டுமொத்த
சாயல் வாங்கி
வந்தேனா?
இல்லை பாவத்தின்
முகவரியை பகிர்வு
கொள்ள வந்தேனா ?

நான் கண்ட
சோகங்கள் - இங்கே
சொல்வதற்கில்லை!
அனுபவித்துதான்
ஆக வேண்டும்
மறுப்பதிற்கில்லை!

என் போன்றோரின்
வாழ்க்கை வெறும்
வரைகோட்டு ஓவியங்கள்!
நீங்களே
வண்ணம் தீட்ட வேண்டிய
மிகச்சிறந்த ஓவியர்கள்!
---நாவிஷ் செந்தில்குமார்

14 comments:

kirthee said...

Wow! very nice poem.

Unknown said...

really nice,sir...

Sundari said...

Good One...

Rakesh said...

மிக அளவான வரிகளில்
தெளிவான கருத்துகள்
வாழ்த்துக்கள்

Unknown said...

Its really very nice sir. All the best for your future.

Unknown said...

tat waS A great thought mr.senthil...
munthaya naalil
aetho oru eravil
mugam maraithu kondathu en erantha athir kaalam??


i didnt understand wat u mean by it?

athir kaalam, munthaya naalil maraithu kondathu, means??? explain me please....

Unknown said...

sorry i made a mistak while writing ur para above.... but wat i want is to explain , about " athir kaalam - maraithathu - in munthaya naal" pls mak me clear

Senthilkumar said...
This comment has been removed by the author.
Senthilkumar said...

பார்த்த படித்த விமர்சித்த
அனைவர்க்கும் என் நன்றிகள் கோடி...

Anonymous said...

என் போன்றோரின்
வாழ்க்கை வெறும்
வரைகோட்டு ஓவியங்கள்!
நீங்களே
வண்ணம் தீட்ட வேண்டிய
மிகச்சிறந்த ஓவியர்கள்!
.......................
இதைக்காட்டிலும்
சிறந்த முறையில்
எயிட்ஸ் நோயாளியின் குரலில்
பேசமுடியாது....
இதிலிருக்கும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!
வாழ்த்துக்கள் நாவிஷ்...

நட்புடன்,
இளங்கோ

Unknown said...

பிறப்பளித்வள் - சேர்த்தேஇறப்பையும்எழுதிவிட்டுச் சென்றுவிட்டாள்சிசுக் கொலையிலிருந்துசிறை விடுத்தவள்உயிர் கொல்லி நோயைஉடன் அளித்தாளே!கள்ளிப்பால் கொடுக்கதவறியவள்கொல்லி போட்டு சென்றாளே நான் என்னசாபத்தின் ஒட்டுமொத்தசாயல் வாங்கிவந்தேனா?இல்லை பாவத்தின்முகவரியை பகிர்வுகொள்ள வந்தேனா ?

- Excellent lines...........

Un varigalai Paaratta varthaigal illai! Mounithu vittaen!

Anonymous said...

It's good... keep it up.

Unknown said...

super boss

Anonymous said...

மிகவும் நன்றாக உள்ளது...அழம் நிரைந்த எழுதுக்கள்...