Tuesday, May 22, 2007

அம்மா...


அம்மா...
ஈன்ற போது
வலி பொருத்து நீ
கண்ட சுகம் - அது
நிகராக
உனக்கான இவ்வரியை
பொறிக்கையிலே
உணர்ந்தேன் அம்மா...

உன்னை அழைத்துதான்
மொழி கற்றேன்...
உன் பாத சுவடு பார்த்துதான்
நடை பயின்றேன்...

உனக்கு கொள்ளி வைக்க
பிள்ளைகள் சிலர் உண்டு
என்னை அள்ளி அனைக்க
வேறு தாய் உண்டோ?

பத்து திங்கள்
எனை சுமந்து
பெற்றெடுத்த பெருமைக்கு
என்ன நான் செய்தாலும்
எள்ளளவு கை மாறே!

உன் நினைவு மறக்கும்
வேளை ஏது
மறந்தால்...
நான் இறக்கும்
நாளே அது!

விண்ணை முட்டும்
புகழ் தொடுவேன்
உந்தன் பெயரை
அங்கே முழங்கிடுவேன்...
எதிரொலி கேட்கும்
எந்தாயே...
எந்தன் பிள்ளை
பெருமை கேள் என
எதிரியிடத்தும் போய்
சொல் நீயே...
—நாவிஷ் செந்தில்குமார்

காதலியே!


அதெப்படி?
இரவில் என்னை
உறங்கிப்போக செய்யும்
உன் நினைவுகளே
காலையில் என்னை
எழுப்பி விடவும் செய்கின்றன...

உலகில் மற்றவர்கள் எல்லாம்
எனக்கு உறவு...
நீ மட்டுமே
உயிர்...

உலகத்தில் ஒரு முறை மட்டுமே
நிகழ்ந்துவிட்ட அதிசயம்
உன் பிறப்பு...

பூமிக்கு நிலாவிடமிருந்துதான்
ஒளி கிடைக்கிறது!
எனக்கு மட்டும்
உன்னிடமிருந்துதான் கிடைக்கிறது...

உன்னை கை பிடிக்க வேண்டும்
என்ற ஆசை எல்லாம்
எனக்கு அறவே இல்லை...
நீ சுவாசித்த காற்றை
பிடிக்க வேண்டும் என்ற
ஆசை மட்டுமே!
—நாவிஷ் செந்தில்குமார்

நீ மட்டுமே….


நீ பேசிய வார்த்தைகளை காட்டிலும்
பேசாத வார்த்தைகள் தான்
மிகப்பெரிய பாக்கியசாலிகள்…
உனக்குள்ளேயே இன்னும்
புதைந்து கிடக்கின்றனவே…

எல்லா பூக்களும் பூக்கின்றன..
நீ சூடும் பூக்கள் மட்டுமே
பூரிக்கின்றன…

உன்னோடு வாழ்ந்து விட்டுப்போக
கூட தேவை இல்லை..
ஒருமுறை
வீதியில் வந்துவிட்டு போனாலே
போதும்…

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்…
உன்னை நினைத்தாலே
கோடி பொன்

நீ ஒன்றும்
அழகி இல்லை…
ஆனால்
உன்னை தவிர
அழகி
உலகில் அறவே
இல்லை!
நாவிஷ் செந்தில்குமார்