ஏழு புன்னகைகளைக் கொடுத்து
இவைகளைச் செலவுசெய்தால்
உனக்கொரு பரிசு தருகிறேன்
என்றான் அவன்.
நாளிதழ் போடுகிற
கண்ணனிடம் ஒன்றைக் கொடுத்தேன்
அவனிடமிருந்த ஒன்றை
எனக்குக் கொடுத்தான்!
பள்ளிக்குச் சென்ற அனைகாவிடம்
இன்னொன்றைக் கொடுத்தேன்
அவளோ பதிலுக்கு
இரண்டைக் கொடுத்தாள்!
கொடுத்ததற்குப் பின்னாகப்
பெற்றவை
தாமாகக் கிடைத்தவை என
இருபத்திமூன்றாகியது கணக்கு
எவரால் கொடுக்கமுடியாதோ
அவர்களிடமே
இனி கொடுப்பது என
முடிவுசெய்தேன்...
எண்ணிக்கை குறையத் தொடங்கியது
யுக்தி வேலைசெய்வதால்
திரும்பத் திரும்ப
அவர்களிடமே கொடுத்தேன்!
வாங்கிப்பழகியவர்கள்
ஒரு நிலைக்குப்பின்
கொடுக்கப்பழகி
நிறையக் கொடுக்கத்தொடங்கினர்...
இருப்பை எண்ணுவது
சிரமமாக இருந்தது
பரிசு தருவதாகச் சொன்னவன்
முகம் மறந்தே போனது!
தோற்றுப்போவார்கள் என்பதால்
எதிர்படுகிறவர்களிடம்
ஆளுக்கு ஏழாகக் கொடுத்து
செலவுசெய்தால் பரிசு என்கிறேன்!
நன்றி : ஆனந்த விகடன்
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
13 years ago
16 comments:
நல்லதொரு கவிதை செந்தில்.
தொடருங்கள்.
அருமை..
வித்தியாசமான அழகான கவிதை நாவிஷ்.தொடருங்கள்
நன்றி செல்வராஜ் ஜெகதீசன், சென்ஷி மற்றும் சாந்தி அக்கா...
அடடா !!!
வாழ்த்துக்கள்..
இது நட்டமில்லாதா முதலீடுங்க... ஆனா வட்டியுண்டு. ஆகயால் தாராளமாக புன்னகை செய்யலாம். வாழ்த்துக்கள்
நன்றி ஆறுமுகம் முருகேசன் மற்றும் கருணாகரசு
அழகு.. வாழ்த்துகள் நண்பா
எனக்கு விளக்கம்,சொலி நீ குடுத்த ஏழு புன்னகை நான் செலவு செய்யமுடியாமல் தோற்றாலும் உன்னை போல கொடுத்தவனை மறக்கமாட்டேன்... நீயும் மறக்காமல் இருக்க என்னுடைய ஏழு புன்னகையும் மீண்டும் உன் கணக்கில் சேர்த்து கொள் :) :) :) :) :) :) :)
உன் திறமை மென்மேலும் மிளிர வாழ்த்தும் அன்பு நெஞ்சம்
நன்றி உழவன் மற்றும் அனுஷ்கா அக்கா!
i like it..keep rocking senthil...congrats..!!!
வாவ்!சந்தோசம் நாவிஷ்.
கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு.
Vow superb poem,, good thought and good representation. keepit up. :)
நன்றி Kannan, பா.ரா மற்றும் Hakkimabdula!
very nice !!!
கவிதையில் மனிதர்கள் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான ஒன்றை போகிற போக்கில் அநாயசமாக சொல்லிவிட்டாய் நாவிஷ்... கவிதைகளின் பலமே இப்படிப்பட்ட வடிவங்களில்தான் வாழ்கிறது... வாழ்த்துக்கள் நண்பா!
Post a Comment