வாழ்வின் நீளம்
**********************
நூற்றியிருபது கேட்ட
கடைக்காரனிடம்
நூறு தருவதாகச் சொல்கிறான்
வாங்க வந்தவன்...
பேரம் படியாமையின் கணங்களில்
நீள்கிறது
கறிக்கோழி ஒன்றின்
வாழ்க்கை!
பறவையின் ஒலி
***************************
வீட்டுக் கதவு
திறந்து மூடும்போது
தவறாமல் ஒலிக்கிறது
அந்த மரத்தில்
எப்போதோ வாழ்ந்த
பறவையின்
'கி(ரீ)ச்... கி(ரீ)ச்' சத்தம்!
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
14 years ago
19 comments:
இரண்டும் அருமை.
பூங்கொத்து!
simply superb.Congrats for AV publishing.
வாழ்த்துக்கள் நாவீஷ்.. :)
வாழ்த்துக்கள் நவீஷ்... :)
இயல்பான நிகழ்வுகளை கவிதையாக்கியிருப்பது அழகு.
கோழி - ரசித்தேன்
நான் இத முன்னாடியே படிச்சுருக்கேன்..இல்ல?
அருமையான கவிதைகள் ..
//எப்போதோ வாழ்ந்த
பறவையின்
'கி(ரீ)ச்... கி(ரீ)ச்' சத்தம்!//
மிக்க அருமை
அருமையா இருக்கு.. வாழ்த்துகள் :-)
கண் முன்னே காட்சியாய்
வாழ்த்துகள்
நல்ல கவிதைகள்.
வாழ்த்துகள்.
very good!
வாழ்த்துக்கள் நாவிஷ்!
நன்றி ராமலக்ஷ்மி மற்றும் அன்புடன் அருணா!
வாழ்த்துகளுக்கு நன்றி, முத்துவேல்!
நன்றி நாணல்.
நன்றி யாநிலாவின் தந்தை மற்றும் செந்தில்
@செந்தில்
ஆம், நண்பா!
நன்றி கணேஷ் மற்றும் உழவன்
நன்றி திகழ், அக்பர் மற்றும் பா.ரா.
Simply super !!!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment