பூஞ்செடி கொடிகளை
அழகாக வெட்டி
நீர்பாய்ச்சி வளர்க்கும்
தோட்டக்காரனாக
00
ஆளில்லாதபோது
இரவுமுழுவதும் விழித்திருந்து
வீட்டைப் பாதுகாக்கிற
காவல்காரனாக
00
குவிந்து கிடக்கிற
துவைத்த ஆடைகளை
சலவை செய்துதருகிற
சலவைக்காரனாக
00
மளிகைச்சாமான்கள்
காய்கறிகள்
மாமிசம் வாங்குகிற
எடுபிடியாக
00
மலக்கறை படிந்த
கழிப்பறைக் கோப்பைகளை
தேய்த்துக் கழுவுகிற
கூலிக்காரனாக
00
குழந்தைகளைப்
பள்ளிக்கு அழைத்துபோகிற
பக்குவமாகப் பார்த்துக்கொள்கிற
ஆண் ஆயாவாக
00
உண்டு மிஞ்சியதைத்
தின்று வாழ்கிற
உயர்திணை நாயாகக்கூட
இருக்க முடிகிறது!
00
வயதான கிழவன்களால்
பெரும்பாலான வீடுகளில்
தாத்தாவாக
இருக்கவே முடிவதில்லை!
**************************************
எதிர்வீட்டுக் குழந்தை
வாழ்க்கைப்பாடம்
படிக்கிறது...
பப்பி - உயர்திணை
தாத்தா - அஃறிணை
--நாவிஷ் செந்தில்குமார்
நன்றி : கீற்று.காம்
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
14 years ago





10 comments:
சூப்பர் தம்பி
:)
//தாத்தாவாக
இருக்கவே முடிவதில்லை!
//
உண்மை தான்...வருத்தமான விஷயம்..மத்தபடி கவிதை ரெம்ப புடிச்சது..
முதல் கவிதை அருமை
வார்த்தைகளில் இருக்கும் உண்மை மனதை சுடுகிறது செந்தில்...:-(
@ க.நா.சாந்தி லெட்சுமணன்
நன்றி சகோதரி!
@வினய்
நன்றி வினய்!
@செந்தில் நாதன்
நன்றி நண்பா!
:)
@கார்த்திகைப் பாண்டியன்
நன்றி நண்பரே!
verumena excellentnu sonna pothuma..!!
கவிதைகள் அருமை. வாழ்த்துகள்.
நன்றி ஆறுமுகம் முருகேசன்!
@அகநாழிகை
நன்றி வாசு!.
ரொம்ப நல்ல கவிதைகள் நாவிஷ்!
நன்றி, விநாயகம்.
ரொம்ப நல்லா இருக்கு செந்தில்.
Post a Comment