Wednesday, February 3, 2010

பூங்கா இருக்கைகளும் சில காதலர்களும்

இயல்பாக இருந்தால்
தொடுவதற்கான சாத்தியங்கள்
அமையப்பெறாத
அவ்விரு பூங்கா இருக்கைகளும்
ஒன்றின்மீது மற்றொன்று
அளவில்லாத பிரியங்கள்
கொண்டவை...
00
காதலின்மீது
பெருமதிப்புடையதாய்
இருந்ததால்
ஸ்பரிசத்தின் மீதும்
ஆழ்ந்த ஈடுபாடுகொண்டு
மாலை நேரங்களில்
பெண்ணாகவும்
ஆணாகவும் மாறி
அளவளாவிக் கொண்டிருக்கும்!
00
பனிக்கால இரவுகளில்
பெருமரத்திலிருந்து
உதிரும் சருகுகள் ஆசிர்வதிக்க
அவை ஒன்றையொன்று
முத்தமிட்டுக்கொள்வது
காண்பதற்கினியது
00
எவனோ ஒருவனின்
சுயதேவைக்காக
எடுத்துச்செல்லப்பட்ட
ஒற்றை இருக்கையின்
இழப்பிற்குப்பின்
வாழ்வின் விளிம்பில் பயணிக்கிற
உறவுகளால் நிராகரிக்கப்பட்ட
மனிதர்களாகவே அவதரிக்கிறது
மற்றொரு இருக்கை.
--நாவிஷ் செந்தில்குமார்
நன்றி: கீற்று.காம்

4 comments:

Unknown said...

:)))

கார்த்திகைப் பாண்டியன் said...

அட்டகாசம்.. மெலிதான வலி நிரம்பிய கவிதை...

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு நண்பரே

Senthilkumar said...

நன்றி ஆறுமுகம் முருகேசன், கார்த்திகைப் பாண்டியன் மற்றும் நேசமித்திரன்.