Friday, February 12, 2010

காதலுக்கு நல்லது

நிலவைப் பார்க்க
நீயும்
நட்சத்திரத்தைப் பார்க்க
நானும்
மொட்டைமாடிக்கு வந்த
ஓரிரவில்
காதல் நம்மைப் பார்த்தது!
00
நீ குடை கொண்டு
வந்தாய்
நான் காதல் கொண்டு
வந்தேன்
வானம் மழை கொண்டு
வந்தது
குடைக்குள் காதல் மழை
பொழிந்தது!
00
எல்லாவற்றையும் போல
நானும் உனக்கொரு
விளையாட்டுப் பொம்மையே
என்னவொன்று
இரவிலும் என்னைக்
கட்டியணைத்துக்கொண்டு
உறங்குவாய்
00
சின்னச் சின்ன
செல்லச்சண்டைகள்
காதலுக்கு நல்லது
அதுவே
ஜென்மப்பகைக்கு
காரணமாகிவிடாமல் இருப்பது
இன்னும் நல்லது.
00
குப்பைபோடப் போனபோது
போன வருடக்
காதலர்தினத்திற்கு
பரிமாறிக்கொள்ளப்பட்ட
வாழ்த்து அட்டை
குப்பைத்தொட்டியில் கிடந்தது
அந்தக் காதல்
எங்கே கிடக்கிறதோ?

நன்றி: கீற்று.காம்

9 comments:

Unknown said...

நச்சுனு ஐந்து காதல் கவிதைகள்..

"காதலுக்கு நல்லது" ரொம்ப கியுட்.. :)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

காதல் கவிதை சரி.ஒவ்வொரு காதலர் தினத்துக்கும் கவிதை மாறலாம்.காதல் மாறலாமோ? அது சரி.இது வயதுக்கோளாறு! அப்படித்தானா நாவிஷ்? வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

கடைசி கவிதை.. செம..:-)))

காதலர் தின வாழ்த்துகள் தல..

Senthilkumar said...

நன்றி ஆறுமுகம் முருகேசன், கார்த்திக் மற்றும் சாந்தி லட்சுமணன்.

@ சாந்தி லட்சுமணன்
என்னக்கா சொல்றீங்கள்?
:)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

//குப்பைபோடப் போனபோது
போன வருடக்
காதலர்தினத்திற்கு
பரிமாறிக்கொள்ளப்பட்ட
வாழ்த்து அட்டை
குப்பைத்தொட்டியில் கிடந்தது
அந்தக் காதல்
எங்கே கிடக்கிறதோ?//
காதல் போயின் காதல் போயின் இன்னொரு காதலா? சும்மா கலாட்டா!
நடத்துங்க! உங்க கவிதைகள் அருமை

PPattian said...

கவிதைகள் அருமைங்க.. குறிப்பாக குடைக்குள் காதல் மழை..

குட்டிப்பையா|Kutipaiya said...

அனைத்துமே அருமை..

Senthilkumar said...

நன்றி புபட்டியன் மற்றும் குட்டிப்பையா

பத்மா said...

நீ குடை கொண்டு
வந்தாய்
நான் காதல் கொண்டு
வந்தேன்
வானம் மழை கொண்டு
வந்தது
குடைக்குள் காதல் மழை
பொழிந்தது!

ஆஹா இப்போதே மழை வேண்டும் என நினைக்கதோன்றும் கவிதை