Sunday, February 21, 2010

குடை பிடித்தவனைக் கொன்றுவிட்டார்கள்

வேளச்சேரி பாரதிநகரில்
கொலை நிகழ்வுகள்
அரங்கேறியிருக்கின்றன

கடந்த வாரத்தில்
நான் ஊரில் இல்லாத
சனி ஞாயிறு அன்று
தெரியாதவர்கள் உள்ளிட்ட
எனக்குப் பரிட்சயமான
நண்பர்களும்
சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள்

ரகுவின் கழுத்து
கைகால்களை அறுத்து
அப்படியே போட்டிருந்தார்கள்

பிரியங்காவை ஒரேயடியாகச்
சாய்த்திருந்தார்கள்

சிவாவின் உயிர் வாசனை
இன்னும் அடங்கியபாடில்லை

திவ்யாவின் சடலத்தை
ஒரு பழைய ஊர்தியில்
இன்று காலையில்தான்
ஏற்றினார்கள்...

குறிப்பு ஒன்று
மேலே சொன்ன
பெயர்கள் யாவும்
அவர்களின் இயற்பெயர் அல்ல
நான் அவர்களுக்குச்
சூட்டிய செல்லப்பெயர்கள்

குறிப்பு இரண்டு
இவர்கள்
மனிதன் என்பவருக்கு
மனிதன்
மரம் என்பவருக்கு
மரம்.

நன்றி : கீற்று.காம்

12 comments:

PPattian said...

நல்லா பயந்துட்டேன் போங்க!.. மரங்கள் குறித்து கவலைதான்.. எதற்காக வெட்டினார்கள்?

Senthilkumar said...

வேளச்சேரி - பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் சாலையை அகலப்படுத்துவதற்காக...
:(

Unknown said...

wooow

Unknown said...

நிகழ்வுக்கு சோகமாயொரு பின்னூட்டமும்.. நன்றி..

Kannan said...

எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு செந்தில் நீங்க சொன்ன விதம்...!!

ராகவன் said...

அன்பு நாவிஷ்,

ரொம்ப அழகான கவிதை... வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்னு நெக்குருகிப் போனேன் படித்த போது.

அன்புடன்
ராகவன்

பா.ராஜாராம் said...

நல்ல கவிதை நாவிஷ்!

Senthilkumar said...

நன்றி ஆறுமுகம் முருகேசன், Kannan, ராகவன் மற்றும் பா.ரா!

நிலாரசிகன் said...

அற்புதம்!

Anbunesan said...

Very good perspective.....

kalakkal ponga.

kosindra said...

நல்ல கவிதை-kosindra

kosindra said...

Nalla kavithai nanba