Monday, December 28, 2009

கண்டதைச் சொல்லுகிறேன்

இருவருக்கிடையேயான
வாள்வீச்சு
காயமின்றி முடிந்ததெனச்
சொல்கிறார்கள்...
பிரபஞ்சத்தின் வெளிகள்
வெட்டப்பட்டு
வழிந்துகொண்டிருக்கிறது
இரத்தம்

தன்னையுரசிச் சென்ற
பசுமாட்டை
'எருமைமாடு' எனத்
திட்டியவனைப் பார்த்து
'ம்ம்ம்ர்ரூ' என்றவாறு
நகர்ந்தது மாடு...
அவ்வார்த்தையை
குருடனென மொழிபெயர்த்தேன்

அடுக்குமாடி குடியிருப்பில்
விரகதாபத்தைக்
கொத்தித்தின்கின்றன
அருகிலுள்ள வீடுகளின்
கலவிச்சப்தங்கள்...
விரிசலடைகின்றன
விதவையொருத்தியின்
படுக்கையறைச்சுவர்கள்

நூற்றியிருபது கேட்ட
கடைக்காரனிடம்
நூறு தருவதாகச் சொல்கிறான்
வாங்க வந்தவன்...
பேரம்படியாமையின் கணங்களில்
நீள்கிறது
கறிக்கோழியொன்றின்
வாழ்க்கை

பெண்ணொருத்தியின்
ஜாக்கெட்டிலிருந்த
ஜன்னலின் வடிவம்
இந்திய வரைபடம்போலிருந்தது...
தமிழகமிருக்கிற
பகுதியிலிருந்த மச்சத்தை
சென்னையெனக் குறித்ததும்
மீள்கிறது பார்வை
நன்றி : உயிரோசை.காம் மற்றும் திண்ணை.காம்

7 comments:

Unknown said...

very very nice.........

mvalarpirai said...

Good one

Senthilkumar said...

தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஆறுமுகம் முருகேசன் மற்றும் வளர்பிறை

நிலாரசிகன் said...

அற்புதமாக இருக்கிறது நாவிஷ். மேன் மேலும் வளர வாழ்த்துகள் :)

Senthilkumar said...

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி, நிலா.

கார்த்திகைப் பாண்டியன் said...

//அடுக்குமாடி குடியிருப்பில்
விரகதாபத்தைக்
கொத்தித்தின்கின்றன
அருகிலுள்ள வீடுகளின்
கலவிச்சப்தங்கள்...
விரிசலடைகின்றன
விதவையொருத்தியின்
படுக்கையறைச்சுவர்கள்//

எனக்கு மிகவும் பிடித்தது..

Senthilkumar said...

வாசித்தமைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்.