Monday, December 28, 2009

கூடல்பொழுதில் கசியும் கானல்நீர்

இரட்டைக்குழந்தைகள்
ஆணொன்று
பெண்ணொன்றுமாய்
வேண்டுமென்கிறாள்
வெற்றுமார்பில்
விரல் நகர்த்திக் கோலமிடும்
மனைவி
00
இருந்தால் ஆபத்தென்பதால்
குடல்வால்
அறுவைச்சிகிச்சையெனச் சொல்லி
கர்ப்பப்பையை
அகற்றிவிட்ட கதை
அறியாதவளிடம்
'சரி'யெனச் சமாளிக்கிறான்
கணவன்
00
வெறுமை பரவிய
படுக்கையறையில்
ஏதுமறியாதவளின்
கனவுகள் விரிய
எதார்த்தம் தெரிந்துகொண்டவனின்
கண்களில் குருதி வழிய
இனிவரும் இரவுகளில்
அவளது ஆண்மை
இவனைப் புணரும்
இவனது பெண்மை
கருவுற்ற நெஞ்சிலே
குழந்தையைச் சுமக்கும்!

நன்றி : திண்ணை.காம்

4 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்பின் நண்பர் செந்தில்.
தொடர்ச்சியாக உங்கள் கவிதைகளை "திண்ணையில்" படித்து வருகிறேன். தங்களுக்கான வலைப்பூ இருப்பது இன்றுதான் தெரியும்.. கவிதைகளில் கலக்கி எடுக்கிறீர்கள்.. வாழ்த்துகள்..

பிரியமுடன்,
மா.கார்த்திகைப் பாண்டியன்

Senthilkumar said...

தொடர்ந்து வாசிப்பதற்கும், பின்னூட்டமளித்தமைக்கும் மிக்க நன்றி, கார்த்திகை பாண்டியன்.

விஜய் said...

ஒரு முழு படத்தின் கதையை சில வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள்

மிக மிக ரசித்தேன்

இனி என் வருகை எப்பவும்

வாழ்த்துக்கள்

விஜய்

Senthilkumar said...

பின்னூட்டமளித்தமைக்கு மிக்க நன்றி, விஜய்.