தண்ணீர்த் தொட்டியில்
தெரிந்த வானத்தில் இருந்த
மேகத்தைக் கொத்திக் கொத்தி
தாகத்தைத் தீர்த்துக்கொண்டது
காகமொன்று!
00
மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டி
மரத்தின் காலடியில்
என்ன சொல்லி
கெஞ்சியழுகின்றன
உதிர்ந்த சருகுகள்?
00
அனுமதி பெறாமலே
வீடு நுழைந்து
நாற்காலியிலமர்ந்திருந்த வெயில்
ஜன்னல் கதவுகளடைத்துத் திரும்புவதற்குள்
சொல்லிக்கொள்ளாமல்
எந்த வழியாக
வெளிச்சென்றிருக்கும்?
00
விளையாடிக் களைத்து
வீடு திரும்பும் குழந்தையின்
பிரிவைத் தாங்காத கடல்
ஓடிவந்து பேரலையடித்து
கால் நனைப்பது தவிர
எப்படி உணர்த்தும்
குழந்தையின் மீதான
பிரியத்தை?
00
பேருந்து என் ஊரை
அடைந்த நேரத்தில்
எந்த ஊரைச்
சென்றடைந்திருக்கும்
எதிர்த்திசையில்
ஓடிய மரங்கள்?
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
13 years ago
16 comments:
//மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டி
மரத்தின் காலடியில்
என்ன சொல்லி
கெஞ்சியழுகின்றன
உதிர்ந்த சருகுகள்?//
Nice
அனைத்தும் அருமை.
//பேருந்து என் ஊரை
அடைந்த நேரத்தில்
எந்த ஊரைச்
சென்றடைந்திருக்கும்
எதிர்த்திசையில்
ஓடிய மரங்கள்? //
கிளாஸ்.
ரொம்ப நல்லா இருக்கு செந்தில் குமார்
நண்பர்கள் பலருக்கு பரிந்துரைத்துள்ளேன் :)
ரொம்ப நல்ல இருக்கு செந்தில் ...அருமை எல்லாமே ..........
அன்புடன் கணேஷ் .......
அழகான் கவிதைத் தொகுப்பு ......பாராடுக்கள்.
கவிதைகள் அருமை, நாவிஷ்.
(விடைகள் அருகில்) தமாஷ்.
தண்ணீர்த் தொட்டியில்
தெரிந்த வானத்தில் இருந்த
மேகத்தைக் கொத்திக் கொத்தி
தாகத்தைத் தீர்த்துக்கொண்டது
காகமொன்று! (முதல் கொத்திலேயே
பிம்ப மேகம் கலைந்திடாதோ?)
00
மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டி
மரத்தின் காலடியில்
என்ன சொல்லி
கெஞ்சியழுகின்றன
உதிர்ந்த சருகுகள்? (இ(அ)ணைப்பின் சுகம்)
00
அனுமதி பெறாமலே
வீடு நுழைந்து
நாற்காலியிலமர்ந்திருந்த வெயில்
ஜன்னல் கதவுகளடைத்துத் திரும்புவதற்குள்
சொல்லிக்கொள்ளாமல்
எந்த வழியாக
வெளிச்சென்றிருக்கும்? (வந்த வழியில் தான்)
00
விளையாடிக் களைத்து
வீடு திரும்பும் குழந்தையின்
பிரிவைத் தாங்காத கடல்
ஓடிவந்து பேரலையடித்து
கால் நனைப்பது தவிர
எப்படி உணர்த்தும்
குழந்தையின் மீதான
பிரியத்தை? (முத்தமிடுமளவு வந்தால் துப்பி விடுமல்லவா?)
00
பேருந்து என் ஊரை
அடைந்த நேரத்தில்
எந்த ஊரைச்
சென்றடைந்திருக்கும்
எதிர்த்திசையில்
ஓடிய மரங்கள்? (பிறந்த ஊரை)
நன்றி! வழிப்போக்கன்.
எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி! இராமசாமி கண்ணன்.
@நேசமித்ரன்
தாங்கள் வாசித்ததே பெரும் பரிசு எனக்கு. கூடுதலாக, நண்பர்களுக்கும் பரிந்துரைத்தது மிகப் பெரிய பரிசு.
நன்றி நேசன்.
முதல் முறையாக வருகை தந்தமைக்கு மிக்க நன்றி! கணேஷ் .
தங்களின் ஊக்கம் எனக்கு எப்போதும் தேவை.
முதல் முறையாக வருகை தந்தமைக்கு மிக்க நன்றி! நிலாமதி.
தங்களின் ஊக்கம் எனக்கு எப்போதும் தேவை.
@வாசன்
தங்களின் விடைகள் அருமை. மிக ரசித்தேன்.
முதல் முறையாக வந்தமைக்கு மிக்க நன்றி!
நன்றி செந்தில்....
பின்னூட்டம் முதல் முறை என்றாலும் தொடர்ந்து உங்கள் அனைத்து கவிதைகளையும் படித்து வருகிறேன் ..fb யில் கூட அஞ்சல் அனுப்பி உள்ளேன் அதே கணேஷ் தான் செந்தில் ........
எப்போதும் போல் கவிதைகள் மிக அருமை!
@கணேஷ்
அந்த நண்பர்தானா நீங்கள். அருமை. மீண்டும் நன்றி!
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மோகன்!.
Post a Comment