Friday, June 25, 2010

மூன்று கவிதைகள்

நிராகரிப்பு
*****************************************
வீட்டருகே தேங்கியிருந்த
மழைநீரில்
குழந்தையின்
நிராகரிப்பின் சுமை தாங்காது
அமிழத்தொடங்கிய
அழுக்கேறிய
பழைய பொம்மையை
எடுத்து
பிரியங்களுடன்
அணைத்துக்கொண்டேன்…
அழத்தொடங்கியது
பொம்மை.
00
சமையல் குறிப்பு
*****************************************
இருநூறு மில்லி
ஆவின் பாலில்
இரண்டு தேக்கரண்டி
சர்க்கரை கலந்து
வெதுவெதுப்பான சூட்டிலே
காயவிட்டு
வெண்மை மாறுமுன்
இறக்கிவிட்டால்
தாய்ப்பால் தயார்.
00
வானவில்
*****************************************
பென்சிலைக் கொடுத்து
வானவில்
வரையச் சொன்னேன்
குழந்தையிடம்
ஏழு வண்ணங்களுக்கு
என்ன செய்கிறாளென்ற
எதிர்பார்ப்போடு…
மழையை வரைந்துவிட்டு
நிற்கும்வரை காத்திரு
வானவில் வருமென்றாள்!
--நாவிஷ் செந்தில்குமார்

17 comments:

http://rkguru.blogspot.com/ said...

arumaiyana kavithai......


உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

Mohan said...

மூன்று கவிதைகளுமே நன்றாக இருக்கிறது!

Unknown said...

நல்லா இருக்குங்க.

பாலா said...

wow superb boss

Katz said...

irandaavathaiyum moonravathaiyum rasithen

துரோகி said...

// மூன்று கவிதைகளுமே நன்றாக இருக்கிறது! //
அதே!

பத்மா said...

மழைக்கு காத்திருத்தல் மிக அருமை ...

Swengnr said...

கவிதை அருமை!

பா.ராஜாராம் said...

மூன்றுமே ரொம்ப நல்லாருக்கு நாவிஷ்!

Senthilkumar said...

வந்து வாசித்தமைக்கும், வாக்களித்தமைக்கும் மிக்க நன்றி! குரு.
நான் இப்போதுதான் தமிழிஷ் வாக்குகளைப் பற்றி தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

Senthilkumar said...

வருக்கைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, மோகன்.

Senthilkumar said...

நன்றி செல்வராஜ் ஜெகதீசன். :-)

Senthilkumar said...

வருகைக்கு நன்றி வழிப்போக்கன் (?)
இனி அடிக்கடி என் (வலைப்பூ) வீட்டுப் பக்கமும் வந்து போங்க :)

Senthilkumar said...

@துரோகி
பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Senthilkumar said...

@பத்மா
நன்றி தோழி!

Senthilkumar said...

@Software engineer
முதல்முறையாக வருகை தந்தமைக்கும், வாசித்தமைக்கும் மிக்க நன்றி!

Senthilkumar said...

@பா. ரா
ரொம்ப நன்றி அண்ணா!