Wednesday, November 26, 2008

சென்னையில் இன்று அடை மழை!!



பொட்டு மழை பெய்யலையே
என்ற ஜனம் இப்போ
கொட்டும் மழையிலே...
தொட்டி மீன்களோ
வெட்டவெளி நீரிலே...

மழை நின்ற தருணங்களில்
மரக்கிளை பெய்கிறது...
வேர்களோடு பூக்களும்
இன்று நீர் குடிக்கின்றன

கடைக்கு வந்த பெண் ஒருத்தியை
காற்றின் துணையோடு
குடையை விலக்கி
தொட்டுப்பார்த்தது மழைத்துளி...

ஊருக்கே பெய்த மழை
ஏனோ
பள்ளி கல்லூரிகளின்
கதவுகளை மட்டுமே
மூடியது...
அலுவலகமெங்கும்
ஆடை நனைந்த
கோலங்களே...

வந்து வந்து போகும்
மின்சாரம்
மொத்தமாய்
நின்றே போனது

தவளைகள் தன்
வாயால் அழைத்தும்
பாவம் பாம்புகள்
பதுங்கியே இருக்கின்றன...

இறுதி கணங்களில்
எரிகிறது மெழுகுவர்த்தி
இதற்கு அடுத்த வரி
இருட்டில் எழுதியது...
சென்னையில் இன்று
அடை மழை!!
--நாவிஷ் செந்தில்குமார்

3 comments:

Anonymous said...

//மழை நின்ற தருணங்களில்
மரக்கிளை பெய்கிறது...//

//வந்து வந்து போகும்
மின்சாரம்
மொத்தமாய்
நின்றே போனது//

//இறுதி கணங்களில்
எரிகிறது மெழுகுவர்த்தி
இதற்கு அடுத்த வரி
இருட்டில் எழுதியது...//

நல்லா இருக்குங்க;ரசிச்சேன்.

வல்லிசிம்ஹன் said...

அற்புதம்.

செய்தியை அருமையாகச்சொல்லிவிட்டீர்கள்.
இவ்வளவு மழையா சென்னையில்:(

Senthilkumar said...

நன்றி வடகரை வேலன்..


ஆமாம் வல்லிசிம்ஹன், வீட்டை விட்டு வெளியில் வரவே முடியவில்லை..அவ்வளவு மழை...