உணவே மாத்திரை
*****************************************
'இரண்டு நாளா
மூட்டுவலி, காய்ச்சல்
அடிக்குது...
ஒரு மாத்திரை இனாமாகக்
கொடுப்பியா தம்பி?' என்றாள்
பிள்ளைகளால் கைவிடப்பட்ட
லட்சுமிப் பாட்டி.
'ஆகாரத்துக்குப் பின்
ஒரு நாளுக்கு
மூன்று வேளை...'
எனச் சொல்லி
கொடுத்தார்
மருந்துக்கடை ராசு அண்ணன்.
'நாளுக்கு ஒரு வேளையென
மூன்று நாளுக்குத்
தின்னலாமா?' எனப்
பரிதாமாகக் கேட்டாள்
பாட்டி!
(நன்றி: ஆனந்த விகடன்)
00
அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு
********************************************
சித்தாள் வேலை செய்கிற
அவனை
கொத்தனார், தச்சர் உள்ளிட்ட
வீட்டு வேலை பார்ப்பவர்கள்
'டே.. ஊமையா...' என்றுதான்
அழைப்பார்கள்.
மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு
ஓய்வெடுக்கும் போது
வீடு கட்ட
குவிக்கப்பட்டிருக்கும் மணலில்
'ராமு' என்ற தன் பெயரை
எழுதி
கொஞ்சநேரம் வெறித்துவிட்டு
அழிப்பான் அவன்.
--நாவிஷ் செந்தில்குமார்
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
13 years ago
20 comments:
இரண்டு கவிதைகளும் மிகவும் அருமை. நல்ல அனுபவத்தைக் கொடுத்தது உங்களின் கவிதைகள்!
வாசித்தமைக்கு நன்றி! மோகன்.
ஆனத விகடனில் காலையிலேயே படித்தேன். ரசித்தேன். அருமையான கவிதை. ஊமை பற்றிய கவிதையும் அருமை. நிறைய எழுதுங்கள் நண்பரே, வாழ்த்துக்கள். அப்படியே ஊமை பற்றிய என் கவிதையையும் படியுங்கள்
ஊமை
ஆனந்த விகடனில் இந்த கவிதையை காலையிலேயே படித்தேன். ரசித்தேன். அருமையான கவிதை. ஊமை பற்றிய கவிதையும் அருமை. நிறைய எழுதுங்கள் நண்பரே, வாழ்த்துக்கள். அப்படியே ஊமை பற்றிய என் கவிதையையும் படிக்க....
இந்த சுட்டியை அழுத்தவும்
கவிதை இரண்டும் மணக்கின்றன. வாழ்த்துக்கள்
நல்லாயிருக்கு..வாழ்த்துக்கள்..
மிக நல்ல கவிதைகள்
ரசித்தேன்
பாட்டியின் கிழிந்த சட்டையும். குழிவிழுந்த கண்ணும், கவிதையையும் தாண்டி ஊமை மனதில்
மண்ணில் எழுத்தாய் உறுத்திக் கொண்டே. இல்லாமையும்,இயலாமையும்,உங்கள் சொல்வண்மையால் அரங்கேறியிருக்கிறது ஆனந்த விகடனில். வாழ்த்துக்கள்.
//'நாளுக்கு ஒரு வேளையென
மூன்று நாளுக்குத்
தின்னலாமா?' எனப்
பரிதாமாகக் கேட்டாள்
பாட்டி!//-
intha variyai padithavudan manasu ennavo seigirathu....
arumai... arumai....
இரண்டு கவிதைகளுமே நெகிழ்ச்சியாக இருந்தது நாவிஷ்.
மிகவும் நன்றாக இருக்கிறது
நெகிழ வைக்கும் கவிதைகள். அற்புதம் :)
விகடனுக்கு வாழ்த்துக்கள்
வாசித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
முதல் கவிதை வாசித்து முடித்ததும் சில கணங்கள் ஸ்தம்பித்து விட்டேன். விவரிக்க வார்த்தைகளில்லை.
முதல் கவிதை கொடுத்த உணர்வினையே இரண்டாம் கவிதையும் கொடுத்தாலும், பாட்டிக் கவிதையின் தாக்கத்தோடு இதனைப் படித்ததால், இதனுடைய தாக்கம் தனித்து தெரியவில்லை.
இரண்டும் மிகவும் சிறப்பாக உள்ளன, வாழ்த்துகள்.
சூப்பர்ப் கவிதைகள் நாவிஷ் செந்தில்குமார்..:)
no chance .....what a lines?
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
கவிதைகள்
பேசும் நடைமுறையில்
இப்போதுதான்
முதல் முறையாக,
வாசித்திருக்கிறேன்...
நன்றி... சகோ...
நல்ல கவிதைகள் நாவிஷ்... வாழ்த்துக்கள்..
Post a Comment