Thursday, August 5, 2010

ஆனந்தவிகடனில் வெளியாகியிருக்கும் கவிதை

உடையும் கனவு
***************************************
மாநகரின் மையத்தில்
வீடுகட்ட வேண்டுமென்ற
கனவை நிஜமாக்க
விலைக்கு வந்த
வீடொன்றை வாங்கி
இடித்தோம்...

வாழ்ந்து கெட்ட
குடும்பத்தின் கனவொன்று
செங்கல் செங்கலாக
விழுந்தது!
00
கையசைப்பு
*****************************
ரயில் பயணங்களில்
உடல் குலுங்கும்போது
வழிநெடுகிலும்
கையசைக்கும் குழந்தைகளுக்காக
ரயில் பதிலுக்கு
தன் உடல் அசைப்பதாகவே
உணர்கிறேன்.
00
ஏக்கம்
*****************************
அலுவலகம் விட்டு வரும்
பெற்றோரை
ஐந்து மணியிலிருந்து
எதிர்பார்த்து ஏமாந்து
உறங்கிப்போன குழந்தை
தேக்கிவைத்திருந்த முத்தங்கள்
இரவு ஒன்பது மணிக்கு
குட்டி வாயிலிருந்து
எச்சிலாக வடிகிறது.
(இந்த வாரம் ஆனந்த விகடனில் வந்திருக்கிறது)
--நாவிஷ் செந்தில்குமார்

8 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் செந்தில்... கவிதைகள் நன்றாக இருக்கின்றன..

க ரா said...

எல்லா கவிதைகளும் நல்லா இருக்கு செந்தில் :)

priyamudanprabu said...

வாழ்த்துக்கள்

ஆதவா said...

முதல் கவிதையும் கடைசி கவிதையும் மிக அருமை!!
எளிமையாகவும், அழகாகவும் இருக்கு.
மகுடேஸ்வரன் கவிதைகள் படித்ததைப் போல உணர்வு!!தவறாக நினைக்கவேண்டாம்.

ஆ.வியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

ஏக்கம்- தலைப்பும் கருவும் எனது உரையாடல் போட்டிக் கவிதையைப் போன்றதாய். சிலநேரங்களில் ஒத்த சிந்தனையின் வெளிப்பாடுகள் இவ்வாறு அமைந்துவிடுவது இயல்பே. வியப்பும். உங்கள் கவிதை சுருக்கமாக (ஆதவா சொன்னது போல ‘எளிமையாகவும் அழகாகவும்’) வெகு சிறப்பு. வாழ்த்துக்கள்.

p said...

அனைத்தும் அருமை.. கடைசி கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.... :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் செந்தில்... கவிதைகள் நன்றாக இருக்கின்றன..

jothi said...

first one is very nice senthil