Thursday, July 22, 2010

சதுரமான செவ்வகம்

சதுரமான செவ்வகம்
****************************
ஏதோவொன்றை வரைந்துவிட்டு
இதுதான்
சதுரமென்றாள் அனைகாகுட்டி
இல்லவே இல்லை
இப்படித்தான் இருக்கும்
சதுரமென்றேன்
ஏற்றுக்கொள்ளாதவளாக
இப்படியும் இருக்கலாம்
சதுரமென்றாள்...
இங்கே எல்லாம் அதுவாகவே
இருப்பதில்லை என்பதாலும்
குழந்தைக்காக சதுரமே
வளைந்துகொடுக்கத் தயாராக
இருப்பதாலும்
இதுவும் சதுரம்தான் என்ற
முடிவுக்கு வந்தோம்!
00
சிதைவுகள்
****************************
ஆறு குளங்களை
வரையச் சொன்னபோது
அவ்வளவு நேர்த்தியாக
அடுக்குமாடிக் குடியிருப்புகளை
வரைந்துமுடித்தாள்
அனைகாகுட்டி!
00
வேஷம்
****************************
நாலுவயதுக் குழந்தையின்
பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்தேன்...
டாக்டர், வக்கீல் போன்ற
உடைகளை வாங்கிவந்திருந்த
விருந்தினர்கள்
ஆசையோடு அணிவிக்க அணிவிக்க
எல்லாவற்றையும் களைந்துவிட்டு
மீண்டும் மீண்டும்
குழந்தையாகவே நின்றது!
--நாவிஷ் செந்தில்குமார்

6 comments:

மதுரக்காரி said...

குழந்தையாய் குழந்தையால் மட்டும் தான் நிற்க முடியும்....
நம்மால் முயன்றாலும் முடியாது.... :)

மதுரக்காரி said...

குழந்தையாய் குழந்தையால் மட்டும் தான் நிற்க முடியும்....
நம்மால் முயன்றாலும் முடியாது.... :)

Radhakrishnan said...

மென்மையான எளிமையான கவிதைகள் அழகு.

Manikk said...

கவிதைகள் பட்டாசுன்னே ...

Interview Puzzles said...

Your poems are good..
by
Sivaraj R
http://interviewpuzzle.blogspot.com
http://tszone.co.cc/forum/

Siddaarth said...

தங்கள் எழுத்தாக்கம் மிக்க அருமை!