விளையாட்டு
********************************
பேருந்து வரத்தாமதித்த
ஒவ்வொரு கணத்தையும்
நிறுத்தத்தில் காத்திருந்த
பள்ளிச்சிறுமியின் மீது
வீசி விளையாடிக்
கொண்டிருந்தேன்.
00
பிம்பத்தின் மரணம்
********************************
மாலைப் பொழுதொன்றின்
நிசப்தத்தில்
பேரிரைச்சலுடன் ஏதோவொன்று
கிணற்றில் விழுந்தது
ஓடிச்சென்று பார்ப்பதற்குள்ளான
சில கணங்களின்
தாமதத்தில்
ஆடி ஆடி மிதந்துகொண்டிருந்தது
எனது பிம்பம்.
00
ருசி
********************************
அதிகம் ருசியில்லாத
இட்லிக்கடையில் சாப்பிட
அடிக்கடி
அழைக்குமென்னைத்
திட்டுகிற
நண்பனுக்குத் தெரியாது
அக்கடைக்காரப் பெண்மணிக்கு
என் அம்மாவின் சாயல்
இருப்பது!
--நாவிஷ் செந்தில்குமார்
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
13 years ago
12 comments:
me the first & i like the first!!
கவிதை நல்லா இருக்கு...
மூன்றாவது மிக அருமை.
மொத இரண்டும் நலம். மூன்றாவது ரொம்ப நல்லாருக்கு செந்தில்.
சுயம் தானாய் விழுந்ததா
இல்லை தப்பி விழுந்ததா?
அம்மா காணுமிடமெல்லாம் .. நன்று
ரொம்ப நல்லாயிருக்கு..
Thank you for ur comment Kartin.
:)
பின்னூட்டத்திற்கு நன்றி குரு
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி ராமசாமி கண்ணன்
நன்றி பத்மா
நன்றி பிரசன்னா
Post a Comment