Wednesday, August 22, 2007

முதியோர் இல்லங்கள்


வாழும் தெய்வங்கள்
கூடி வாழ்வதால்
கோயில்களாகின்றன
முதியோர் இல்லங்கள்!

புதியன புகுதலும்
பழையன கழிதலும்...
பொருள் வேறாய்ப்
புரிந்துகொண்டவர்களின்
மண உறவு
பெற்றவர்களின் மன முறிவு

இருந்த கடவுளை
துரத்தி விட்டு
எதையோ தேடுவான்
பூஜை அறையில்....

அன்று
தந்தைகள் கான்வென்டில்
கட்டிய தொகைகள் - இன்று
பிள்ளைகளால்
தவனை முறையில்
சேர்க்கப்படுகின்றன...
வயோதிகர் காப்பகங்களில்

பூட்டிய வீட்டிற்கு
காவல் காக்க
நாயை வளர்ப்பான்
ஈன்ற தாயை மட்டும்
ஏதோவொரு
முதியோர் இல்லத்தில் சேர்ப்பான்

கட்டிலின் சத்தத்தில்
கரைந்து போகின்றனவோ
பெற்றோரின் கதறல்கள்?

வந்தவழியை
மறந்தவர்களுக்கு மட்டும்
கருவறையே
கல்லறையாக மாறக்கூடாதோ?
--நாவிஷ் செந்தில்குமார்

8 comments:

Unknown said...

supreb ....

INBrajan # Inbarajan said...

கட்டிலின் சத்தத்தில்
கரைந்து போகின்றனவோ
பெற்றோரின் கதறல்கள்?

...... Very emotional lines...
Do Blog more....

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Impressora e Multifuncional, I hope you enjoy. The address is http://impressora-multifuncional.blogspot.com. A hug.

Nithi... said...

பூட்டிய வீட்டிற்கு
காவல் காக்க
நாயை வளர்ப்பான்
ஈன்ற தாயை மட்டும்
ஏதோவொரு
முதியோர் இல்லத்தில் சேர்ப்பான்//

Arumai nanba

Anonymous said...

makavum nanraaka ullana ungal kavithaikal.. menmelum eluthunga..
vaaluthukkal....

Anonymous said...

சிறப்பான கவிதை.. தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

பூட்டிய வீட்டிற்குகாவல் காக்கநாயை வளர்ப்பான்ஈன்ற தாயை மட்டும்ஏதோவொருமுதியோர் இல்லத்தில் சேர்ப்பான்
கட்டிலின் சத்தத்தில்கரைந்து போகின்றனவோபெற்றோரின் கதறல்கள்?
வந்தவழியைமறந்தவர்களுக்கு மட்டும்கருவறையேகல்லறையாக மாறக்கூடாதோ?




சிந்திக்க வைக்கும் வரிகள் தூண்றுகிரகு .இந்த கவிதையில் உன் எழுதின் ஆழத்தை அறிய முடிகிறது


தொடர்ந்து எழுது....

Unknown said...

nice...