Thursday, September 3, 2009

அப்பா

அப்பா...
வாழ்க்கை தந்த
உன் பெருமையை
எந்தக் கவிதையால்
சொல்லிவிட முடியும்?

உழைத்துக் களைத்த
உன் கை கால்களை
மிதிக்கச் சொல்வாய்...
அறியாத வயதில்
மிதித்ததை நினைத்து
இதயம் வலிக்குதப்பா!
இப்போதென்றால்
முத்தம் வைத்திருப்பேன்!

நீ அதிகம் கற்றதில்லை
என்பதாலே
கணக்குத் தெரியாதவனாய்
இருந்தாயோ?
எனக்குக் காசு கொடுக்கும்
போதெல்லாம்...

உனக்கு ஆடை வாங்கும்போது
விலையைப் பார்ப்பாய்!
எனக்கு மட்டும்
தரத்தைப் பார்ப்பாய்...

நீ வியர்வையில் எழுதிய
என் தலையெழுத்து
இன்று
குளிர்சாதன அறையில்
குளிரில் நடுங்குதப்பா!

என்னுடைய
வெற்றிகளுக்குப் பின்னால்
நீ இருக்கிறாய்!
தோல்விகளுக்குப் பின்னால்
உன் தோள் இருக்கிறது!

எனக்காக வாழ்கின்ற உனக்கு
எது வேண்டுமானாலும்
வாங்கித்தருவேன்!
செருப்பைத் தவிர...
காலமெல்லாம் உன்
கால்களுக்குச் செருப்பாக
நானேயிருப்பேன் அப்பா!

16 comments:

செந்தில் நாதன் Senthil Nathan said...

அருமை நண்பா!! ஆனா ஒரு கேள்வி!! தாத்தாவுக்கும் இந்த கவிதைக்கும் என்ன சம்பந்தம்?

//நீ அதிகம் கற்றதில்லை
என்பதாலே
கணக்குத் தெரியாதவனாய்
இருந்தாயோ?
எனக்குக் காசு கொடுக்கும்
போதெல்லாம்...
//

ரசித்தேன்!!

Suresh Kumar said...

அருமை செந்தில் ... கண் கலங்க வச்சிடிங்க போங்க...

வாழ்த்துக்கள்...

காலம் said...

அருமை செந்தில்

வாழ்த்துக்கள்...

Saranya said...

அப்பா என்றுமே அக்கறையோடு...
நன்று...
வாழ்த்துக்கள்

SV.Sasikumar said...

நன்றி செந்தில் அருமையான கவிதை படைப்பு

Vidhoosh said...

சூப்பர்ங்க

-வித்யா

பா.ராஜாராம் said...

விநாயகம் தளத்தில் இருந்து வருகிறேன்.கண்கலங்கிய கவிதை இது..எல்லா கவிதைகளும் நல்லா இருக்கு.விநாயகத்திற்கு என் நன்றியை தாருங்கள்!

Senthilkumar said...

//
தாத்தாவுக்கும் இந்த கவிதைக்கும் என்ன சம்பந்தம்?
//
நன்றி செந்தில்...
என்ன இது குழப்பான ஒரு கேள்வி கேட்டிருக்க?

Senthilkumar said...

நன்றி சுரேஷ், நாதாரி மற்றும் சரண்யா.

Senthilkumar said...

நன்றி சசிக்குமார் மற்றும் வித்யா

Senthilkumar said...

//
விநாயகம் தளத்தில் இருந்து வருகிறேன்.கண்கலங்கிய கவிதை இது..எல்லா கவிதைகளும் நல்லா இருக்கு.விநாயகத்திற்கு என் நன்றியை தாருங்கள்!
//
நன்றி ராஜாராம்...
அவர் எனது அலுவலக நண்பரும் கூட. :-)

அன்புடன் நான் said...

நீ வியர்வையில் எழுதிய
என் தலையெழுத்து
இன்று
குளிர்சாதன அறையில்
குளிரில் நடுங்குதப்பா!//


மிக‌ ர‌சித்தேன்...விய‌க்கிறேன்...க‌விதையையையும்...த‌ங்க‌ளையும். பாராட்டுக்க‌ள்.

Senthilkumar said...

தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கருணாகரசு.

யாத்ரா said...

என்னங்க இப்படிலாம் எழுதி கொல்றீங்க

//நீ வியர்வையில் எழுதிய
என் தலையெழுத்து
இன்று
குளிர்சாதன அறையில்
குளிரில் நடுங்குதப்பா!

என்னுடைய
வெற்றிகளுக்குப் பின்னால்
நீ இருக்கிறாய்!
தோல்விகளுக்குப் பின்னால்
உன் தோள் இருக்கிறது!//

ரொம்ப அருமையா இருக்குங்க

Senthilkumar said...

//என்னங்க இப்படிலாம் எழுதி கொல்றீங்க

உள்ளதைத்தான் சொன்னேன் யாத்ரா! :)
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

SURYAJEEVA said...

right right