Wednesday, December 10, 2008

டிசம்பர் - 11 - இன்று பாரதி பிறக்கும் நாள்

இடிகொட்டும் இரவில்
கருத்தரித்தவனே
கதிரவனும்
உனைக்கண்டுதானடா
கதிர் தரித்தது!

செப்டம்பர் - 11
இரட்டைக் கோபுரம்
இடிந்த தினம்
மட்டுமல்ல - நீ
இறந்ததினமும்தான்
என்பதிங்கே
எத்தனை பேருக்கு
வெளிச்சம்?

பதினொன்றில்
பிறந்தும் இறந்தும்
போனதாலே
உன்னைப் பத்தோடு
பதினொன்றாக
எண்ணிவிட்ட பாவிகளோ
நாங்கள்?

இங்கே எல்லோரும்
பிறந்ததற்காக
இறந்து போக - நீயோ
மீண்டும் பிறக்கவே
இறந்து போனாயடா!

பலரது பெயரோடு
வருகின்ற பாரதியே
இன்று ஒரு
பிள்ளையாகவே
பிறந்து வா
நீ
பாடவும் சாடவும்
வேண்டியது
இன்னும் ஏராளம்
இங்கே...
--நாவிஷ் செந்தில்குமார்

3 comments:

priyamudanprabu said...

///////
இங்கே எல்லோரும்
பிறந்ததற்காக
இறந்து போக - நீயோ
மீண்டும் பிறக்கவே
இறந்து போனாயடா!
//////////

சிறப்பான வரிகள்

Senthilkumar said...

நன்றி பிரபு...

Anonymous said...

தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில் கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.