Thursday, October 11, 2012

மரத்தைப் பிரசவிக்கும் பறவை

ஒரு மரத்தை
வெட்டும்போது
ஒரு பறவை
கதறும்
எரிச்சல்கொள்ளத் தேவையில்லை...

எங்கோ
ஒரு பழத்தை உண்டு
சிதைக்கவியலாத
அதன் விதையைச் சுமந்து
கழிக்கும்போது
மலவாய் கிழிந்து
பின்னது பயிராகி...
செடியாகி...
மரமாவதை
பார்த்து ரசித்திருந்தால்
நமக்கதன்
வேதனை புரியும்! 
           --நாவிஷ் செந்தில்குமார்
((ஆனந்த விகடனின் பிரசுரமானது)) 

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை வரிகள்...

ஆனந்த விகடனில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்...

நன்றி...

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
பறவையின் துயரை உணர முடிந்தது
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Senthilkumar said...

நன்றி, தனபாலன் சார்.

Senthilkumar said...

நன்றி, ரமணி சார்!