வாழ்வின் நீளம்
**********************
நூற்றியிருபது கேட்ட
கடைக்காரனிடம்
நூறு தருவதாகச் சொல்கிறான்
வாங்க வந்தவன்...
பேரம் படியாமையின் கணங்களில்
நீள்கிறது
கறிக்கோழி ஒன்றின்
வாழ்க்கை!
பறவையின் ஒலி
***************************
வீட்டுக் கதவு
திறந்து மூடும்போது
தவறாமல் ஒலிக்கிறது
அந்த மரத்தில்
எப்போதோ வாழ்ந்த
பறவையின்
'கி(ரீ)ச்... கி(ரீ)ச்' சத்தம்!
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
14 years ago