இருநூறு ஆண்டுகளுக்கு
முன்னர்
இங்கேயொரு
காடு இருந்தது
மலை இருந்தது
ஆறு இருந்தது
ஏரி இருந்தது...
பயிர்கள் வாட
உயிர்கள் வாடுமென்ற
பாடம் படித்தார்கள்!
இன்றோ
காடுகள்
அடுக்குமாடிவீடுகளாக
இருக்கின்றன
மலையில்
மல்டிநேஷனல் கம்பெனி
இருக்கிறது
ஆற்றில்
ஐந்து நட்சத்திர ஹோட்டல்
விளக்குகள் ஜொலிக்கின்றன
ஏரியில் எண்ணைக் கழிவில்
பாலித்தீன் பைகள்
மிதக்கின்றன...
செயற்கைக் குளிர்
இல்லையென்றால்
செத்துப்போவோமென்ற
சித்தாந்தம் ஒலிக்கிறது!
இவைகளில் ஒவ்வொன்றோடும்
இரண்டறக் கலந்துவிட்ட
நாமும் நிச்சயமாக
இருநூறு ஆண்டுகள்
கழித்து
இருக்கமாட்டோம்!
'இங்கே மனிதர்கள்
இருந்தார்கள்' என்ற
கல்வெட்டைச் சுமக்கும்படி
காலத்தைப் பணித்தவர்கள்
பட்டியலில்
நமது பெயர் இருக்கும்!
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
13 years ago
21 comments:
// 'இங்கே மனிதர்கள்
இருந்தார்கள்' என்ற
கல்வெட்டைச் சுமக்கும்படி
காலத்தைப் பணித்தவர்கள்
பட்டியலில்
நமது பெயர் இருக்கும்! //
மிக அருமை.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :)
வெற்றி பெற வாழ்த்துகள்
ஆறுமுகம் முருகேசன் மற்றும் திகழ்,
தங்களின் கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!
//// 'இங்கே மனிதர்கள்
இருந்தார்கள்' என்ற
கல்வெட்டைச்///
வருத்தமான விஷயம்....
மிக அழகான கவிதை வெற்றிபெற வாழ்த்துக்கள்...
தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி,
செந்தில் நாதன் மற்றும் கமலேஷ்
நல்ல கருத்துள்ள கவிதை நாவிஷ். வெற்றி பெற வாழ்த்துக்கள் !
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, அவனி அரவிந்தன்.
கருத்துள்ள சிந்திக்க வைக்கும் கவிதை. வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே!
அருமையான மெஸ்ஸேஜ் - நல்ல கவிதை, வெற்றி பெற வாழ்த்துக்கள் செந்தில்.
வெற்றிபெற வாழ்த்துக்கள் நாவிஷ்!
கவிதை எளிமையான வார்த்தைகளோடு எச்சரிக்கை செய்கிறது.
வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வைத்தரும் கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள்..
முதல் முதலாக வருகை தந்திருக்கும் ஜெஸ்வந்தி மற்றும் S.A. நவாஸுதீன்-க்கு
மிக்க நன்றி!
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி சுந்தரா அக்கா!
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி மாதேவி
Cool...
வெற்றிக்கு வாழ்த்துகள்..
வெற்றி பெற வாழ்த்துகள்.
இங்கே மனிதர்கள் இருந்தார்கள்! கவிதையின் முழு அர்த்தம் அழகாய் தெரிகிறது.
azhivai noki naam
manithan azhivaan kavithai nirkum
all the best
padma
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள் arputhamaana sinthanai.. unmayum kooda
தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி,
புபட்டியன் மற்றும் வெ.இராதாகிருஷ்ணன்.
முதன்முறையாக வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி! பத்மா மற்றும் சக்தியின் மனம்.
Post a Comment