கடினமான வேலை
கடிந்துகொண்ட மேலாளர்
எப்போதுமில்லாத
உடற்சோர்வு என
எதுவுமே சரியில்லை...
காரணமென்னவென யோசிக்கையில்
காலையில் குறுக்கே சென்ற
கறுப்புப் பூனை
கண் முன்னே வந்தது...
வீடு வந்ததும்
எதிர்வீட்டுப் பூனை
இறந்ததுபோனதென
அறைநண்பன் சொன்ன செய்தியால்
'காலையில் என் முகத்தில்தான்
முதலில் விழித்ததோ?' என்ற
கேள்வி எழுந்தது
நன்றி : கீற்று.காம்
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
13 years ago
6 comments:
ம்.. பாவம் அந்தப் பூனை.. நல்ல கவிதை
வாழ்த்துகள் நண்பரே
நல்லா இருக்கு கவிதை
நல்ல சிந்தனைக் கவிதை நாவிஷ்.
//
பாவம் அந்தப் பூனை.. நல்ல கவிதை
//
நன்றி புபட்டியன்!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!, நேசமித்திரன்.
//
நல்ல சிந்தனைக் கவிதை நாவிஷ்.
//
நன்றி மாதேவி!
hi senthil,
ungal kavithaigal ellaam arumai! naanum CTS thaan. ithe mathiri naanum oru kavithai ezhuthi irukkiren.
"poonayin kurukke naan,
atharku eli kidaiththatho illayo!"
Post a Comment