Sunday, October 14, 2012

இந்தக் கோடை ஏன் சிலரை மட்டும் சுடுகிறது?

ஆறு பேர் அமரக்கூடிய
பெரியரக மகிழ்வுந்தொன்று
சிக்னலில் நிற்கிறது.

குழந்தையோடு

பிச்சை எடுக்கும் பெண்ணொருத்தி
மூடியிருக்கும்
அந்த வண்டியின்
கண்ணாடியைத் தட்டுகிறாள்.

‘இல்லை போ’ என்ற

சைகை மட்டுமே கிடைக்க
தட்டிக்கொண்டே இருக்கிறாள்…

வாகனத்தில் உள்ளே இருந்த

குழந்தையொன்று
இவள் கையிலிருக்கும்
குழந்தையைப் பார்த்து
புன்னகைத்தபடியே
உதடுகளைக் குவித்துக்கொண்டு
கண்ணாடியை நோக்கி
வருகிறது…

வெளியிலிருக்கும் குழந்தை

கண்ணாடியில் கன்னம் வைக்கும்
தருணத்தில்
உள்ளே இருக்கும் குழந்தையை
இழுத்துக் கொள்கிறாள்
ஒரு பெண்மணி.

பச்சை விளக்கு எரிந்ததும்

நகரும்  அந்த வண்டியின் பின்னால்
‘No Hand Signal’ என எழுதப் பட்டிருக்கிறது.

ஆனாலும்

கையசைத்து வழியனுப்புகிறது
கையிலிருக்கும்
குழந்தை!
    –நாவிஷ் செந்தில்குமார்
((ஆனந்த விகடனின் பிரசுரமானது)) 

8 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான படைப்பு
விகடனில் படிக்கவில்லை
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

Senthilkumar said...

நன்றி, ரமணி சார்!

தமிழ்ச்செல்வி ஜி.ஜே said...

அருமையான கவிதை

தமிழ்ச்செல்வி ஜி.ஜே said...

அருமை

Senthilkumar said...

நன்றி, தமிழ்ச்செல்வி!

திண்டுக்கல் தனபாலன் said...

காட்சிகள் கண் முன் தெரிந்தன... அருமை...

விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்... (TM 2)

Senthilkumar said...

@தனபாலன்
வாசித்தமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி! :)

சமுத்ரா said...

அருமையான கவிதை